• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

March 6, 2018 தண்டோரா குழு

கோவையில் சிரியா நாட்டின் கொடியை எரித்தும், அமெரிக்க, ரசியா நாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்

சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் வசிக்கும் மக்களை ரஷ்யா, அமெரிக்காவின் துணையோடுசிரியா அரசு,பிப்ரவரி 19-ஆம் தேதி முதல், ரஷ்ய போர் விமானங்களுடன் சேர்ந்து அபாயகரமான வெடிகுண்டு மற்றும் ரசாயன தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலியாகினர்.

இதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தின் போது சிரியா போரின் அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்ததை போல் குழந்தைகளை பிணம் போன்று படுக்க வைத்தும்,கை, கால், தலைகளில் ரத்தம் சொட்டுவது போல சிறுவர்கள், சிறுமியர்களை அமர வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூன்று நாட்டு அரசுகளுக்கு எதிராக கோஷமிட்ட போது சிரியா நாட்டின் கொடியை எரித்தும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் தீ அணைத்தும், போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செய்யது அலி,

சிரியா மண்ணை விட்டு அமெரிக்காவையும் ,ரஷ்யாவையும் வெளியேற்ற ஐநா மன்றம் தலையிட வேண்டும் எனவும், சிரியா ரத்தம் எங்கள் ரத்தம் எனவும் அப்பாவி மக்களை கொல்லும் அமெரிக்காவும் ரஷ்யாவும் பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டினார்.

எட்டு ஆண்டுகளாக சிரியா அரசும், ரஷ்யா, அமெரிக்கா இணைந்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும், ஐநா மன்றம் உரிய நடவடிக்கை எடுக்காமல் தயங்கி நிற்பதாகவும்,வல்லரசு நாடுகள் பெட்ரோலிய பொருளை கொள்ளை அடிக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.பாரத பிரதமர் உடனடியாக சிரியா அரசை கண்டிக்க வேண்டும் எனவும், ஒட்டு மொத்த உலக மக்கள் ஒன்று திரண்டால் போரை தடுத்து நிறுத்த முடியும் எனவும் கூறினார். போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தி பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கலந்துக் கொண்டு கண்டன உரையை ஆற்றினார்.

மேலும் படிக்க