November 14, 2017
கோவையில் தமிழக ஆளுநர் தலைமையிலான கூட்டம்,மாநில உரிமைகளை பறிப்பதாக,அதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பை சேர்ந்த ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் மாவட்ட அதிகாரிகளை சந்தித்து உத்தரவு வழங்குவது மாநில உரிமைகளை பறிக்கின்ற செயல் என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம் சாட்டினார்.
புதுவையில் துணை நிலை ஆளுநரால் செய்யப்படும் செயலை தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் துவங்கி வைத்து இருக்கின்றார் என்றும்,தமிழக அமைச்சரவை செய்ய வேண்டியதை தற்போதை ஆளுநர் செய்கின்றார் எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும்,தமிழக அரசு பா.ஜ.கவின் பினாமி அரசாக ,எடுபிடி அரசாக நடந்து வரும் நிலையில் ஆளுனரின் இந்த நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார் எனவும்,அதிமுக பெயரில் கட்சி வைத்து நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி இதை எப்படி அனுமதித்தார் எனவும் கேள்வி எழுப்பினார்.
அண்ணாவின் கொள்கைகளை அதிமுக குழி தோண்டி புதைத்து வருகின்றது.ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளை பறிக்கும் செயல் எனவும் இதை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒரு போதும் அனுமதிக்காது என தெரிவித்தார். சுதந்திரத்திற்கு பின்னர் எந்த ஒரு ஆளுநரும் செய்யாத நிகழ்வை தற்போதைய ஆளுநர் செய்கின்றார் எனவும் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பை சேர்ந்த ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.