• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்

May 17, 2025 தண்டோரா குழு

டாடா குழுமத்தின் அங்கமான இந்தியாவின் பிரபல தங்கம் மற்றும் வைர நகை பிராண்டான தனிஷ்க்,கோவையில் உள்ள அதன் 3 நகை கடைகளில் கம்மல் மற்றும் மோதிரங்கள் திருவிழாவை துவக்கி உள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனிஷ்க் நகை கடையில் நடைபெற்றது. இதில் தனிஷ்க்கின் கோவை மண்டல பகுதியின் வணிக மேலாளர் இ.சிவரஞ்சனி மற்றும் தனிஷ்க் – மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியின் செயல்பாடுகள் மேலாளர் பி. ராஜா ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் இந்த திருவிழா பற்றி உரையாற்றினர்.

கோயம்புத்தூரில் உள்ள தனிஷ்க்கின் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள ஷோரூம்களில் இந்த கம்மல் மற்றும் மோதிரங்கள் விழா நேற்று (16.5.25) தொடங்கியது. இதில் குழந்தைகளுக்கான கம்மல் முதல் அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்ற வகையில், கம்மல் மற்றும் மோதிரங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழா மே 16 ஆம் தேதி தொடங்கி இம்மாத இறுதி வரை நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.இந்த நாட்களில் 3 கடைகளிலும் ஒவ்வொன்றிலும் 3000க்கும் அதிகமான தனித்துவமான வடிவமைப்புகள் கொண்ட காதணிகள் மற்றும் மோதிரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இந்த நகைகள் 18 காரட் மற்றும் 22 காரட் தங்க வகைகளில் வழங்கப்பட்டுள்ளன.

“இது திருமணக் காலம் மற்றும் புதிய கல்வியாண்டு என்பதால், புதிய பயணத்தைத் தொடங்கும் பெண்கள் புதிய நகைகளை அணிய விரும்புவார்கள் என்பதை உணர்ந்து இந்த திருவிழாவை நாங்கள் ஏற்பாடு செய்து உள்ளோம்” என்று இ.சிவரஞ்சனி கூறினார்.வாங்கிய பொருட்களின் அடிப்படையில் 20% வரை தள்ளுபடி வழங்கப்படும். மேலும் இந்த திருவிழாவில் 916 பழைய தங்க நகைகளுக்கு 100% எக்ஸ்சேன்ஜ் மதிப்பு வழங்கப்பட்டும் என ராஜா கூறினார்.

இந்த விழாவில் மிகவும் தனித்துவமான ‘சோல்மேட்’வைர மோதிரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சோல்மேட் மோதிரங்களை பொறுத்தவரை, ஒரு வைரக்கல் இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு மோதிரங்களாக சிறப்பாக வடிவமைக்கப்படும்.இந்த 2 மோதிரங்கள் தனித்துவமானவை என்றாலும், அவை என்றுமே ஒன்றுடன் ஒன்றாக உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க