• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனியார் பேருந்து மோதி 75 வயது உயிரிழப்பு

December 4, 2019

கோவை கணுவாய் பகுதியில் உள்ள கீர்த்திமான் பள்ளியின் அருகில் தனியார் பேருந்து மோதி 75 வயது மதிக்கத்தக்க பெரியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்லையா(75) என்பவர், கோவை கனுவாய் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவளாளி யாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று தனது பணியை, முடித்து விட்டு சைக்கிளில் தனது வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த சப்தகிரி எனும் தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இறந்தவர் அதே பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார் எனவும், இவர் மகன் மனைவி, ஆகியொர் ஈரோட்டில் இருகின்றனர்.எனவும் தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் இது போன்ற விபத்துக்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், அதற்கு முக்கிய காரணமாக தடாகம் சாலையானது லாலிரோடு முதல் தடாகம் வரை உள்ள இந்த சாலை, மிகவும் குறுகிய சாலையாக உள்ளது தான் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து நடந்த இந்த கீர்த்திமான் பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் எனவும், பள்ளியில் பேருந்து மட்டுமே பத்திற்க்கும் மேற்பட்ட பேருந்து உள்ளதாகவும், பள்ளியின் வாயில் மிக குறுகலாக உள்ளதாலும் பள்ளிக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது இதனால், காலையில் பள்ளிக்கு குழந்தைகளை விட வரும் பெற்றோர்கள் மற்றும் கால் டாக்சி ஓட்டுனர்கள் இங்கு அதிக அளவில் வாகனத்தை நிறுத்துவது, இந்த பகுதியில் வாகனநெரிசலுக்கு காரணம் என்றும், அதனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகளின் நேரமின்மை காரணமாக அதிக வேகமாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் இந்த பகுதி வழிதடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக வேகமாக செல்லுகின்றனர் அதனால் இதுபோன்ற விபத்துகள் இந்த பகுதியில் அடிக்கடி நடைபெறுகிறது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கீர்த்திமான் பள்ளிக்கு செல்லும் வாகனங்களை மாற்று வழி ஏற்படுத்தி வாகன நெரிசல் மற்றும் இது போன்ற விபத்துகளையும் குறைக்க வேண்டும் பள்ளி நிர்வாகம், அதை செய்ய தவறும் பட்சத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.

பள்ளியின் மெத்தன போக்குதான் இன்று இந்த விபத்து நடைபெற்றுள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.மேலும் விபத்து குறித்து துடியலூர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க