• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் பாரில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய பைனான்சியர் கைது

September 30, 2019 தண்டோரா குழு

கோவை கணபதி பாரதிநகரை சேர்ந்த பைனான்சியர் தனியார் பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரையடுத்து போலீசார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்தவர் ஜான்சன்.பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்பாபா காலனி என் எஸ் ஆர் சாலையில் உள்ள ஜே.கே ஹோட்டல் எனும் தனியார் பாரில் மது அருந்தி உள்ளார்.

அப்போது பார் ஊழியர்கள் பணம் கேட்டதால், மது போதையில் இருந்த ஜான்சன் பணம் தரமுடியாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அதேபோல் பாரில் குடித்துக் கொண்டிருந்த மற்றவர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தகவலறிந்து வந்த சாய்பாபா காலனி போலீசார் ஜான்சனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சனிடம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பொது இடத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் ஜான்சனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர் பைனான்ஸ் தொழிலில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து பொதுமக்களை மிரட்டி வசூல் செய்ததாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க