• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் கொரனா பரிசோதனை மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

September 23, 2020 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் கொரனா பரிசோதனை மையத்தில் கொரானா இல்லாதவருக்கு கொரனா இருப்பதாக கூறி சான்றிதழ் வழங்கியதால் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் தனியார் நுண்கிருமி பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யபட்டு வருகிறது.
இந்நிலையில்,கோவை கோவில்மேட்டை சேர்ந்தவர் மணிகண்டன்( 27),நேற்று மேற்கண்ட தனியார் பரிசோதனை நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.இதில் மணிகண்டனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

மேலும் சந்தேகம் அடைந்த மணிகண்டன் கோவை அவினாசி சாலையில் உள்ள மற்றொரு தனியார் மையத்தில் பரிசோதனை மேற்கொண்டார்.அப்போது அதில் கொரோனோ பாதிப்பில்லை என சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவினால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் உறவினருடன் பரிசோதனை நிலையத்தை முற்றுகையிட்டதுடன் பரிசோதனை முடிவு தொடர்பாக பரிசோதனை நிலைய ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது பரிசோதனை நிலைய ஊழியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வடவள்ளி காவல்துறையினர் பாதிக்கபட்டவரின் உறவினர் மற்றும் பரிசோதனை நிலைய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் பரிசோதனை நிலையத்தை தற்காலிகமாக பூட்டினர்.மேலும் பரிசோதனை நிலைய ஊழியர்களிடம் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். இதே பரிசோதனை நிலையத்தில் கடந்த 30ம் தேதி லிங்கனூரை சேர்ந்தவர் யஸ்வந்த்(26), மருதமலை லெப்ரசி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ்( 27) என்ற இருவரும் கொரனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் கொரோனோ தொற்று உறுதி எனவும் மற்றொரு பரிசோதனை நிலையத்தில் சோதனை மேற்கொண்டதில் கொரனா வைரஸ் தாக்கம் இல்லை என முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க