• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை கண்காணிப்பு சிறப்பு ரோந்து வாகனம்

July 1, 2020 தண்டோரா குழு

கோவை மாநகரில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிக்க போலீஸாருக்கு சிறப்பு வாகனங்களை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் துவங்கி வைத்தார்.

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை , மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், போலீஸார் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு உள்ள பகுதிகள், பணியிடங்களை தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் காவலர்கள் கட்டாயமாக முகக்கவசம், கண்ணாடி, கையுறைகள் அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மாநகர் முழுவதும் கொரோனாவால் தனிமைபடுத்தப்பட்ட இடங்களை கண்காணிக்க சிறப்பு குழு மற்றும் ரோந்து செல்ல சிறப்பு வாகனங்களை மாநகர போலீஸ் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தெற்கு மண்டல காவல் எல்லைகளுக்குள் ரோந்து செல்லும் வாகனத்தை காவல் ஆணையர் சுமித் சரண் துவங்கி வைத்தார். இதில் துணை அணையர் பாலாஜி சரவணன், உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல், ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் மாநகரம் முழுவதும் ரோந்து வாகனங்கள் இன்று முதல் செயல்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க