• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட 26ல் 23 பகுதிகளுக்கு தளர்வு – எஸ்.பி.வேலுமணி

May 15, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா தாக்கம் இருந்த 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் 23 பகுதிகள் விடுவிக்கபட்ட நிலையில் மீதமுள்ள 3 பகுதிகள் இன்னும் 3 நாட்களில் விடுவிக்கப்படும் எனவும் கோவை கொரோனா இல்லா மாவட்டமாக மாற உழைத்த அனைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய கோவை மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்க்கு பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கொரோனா தடுப்பில் சென்னைக்கு அடுத்த படியாக கோவை இருந்தது.அதற்கு பிறகு முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் எடுத்த போர்கால நடவடிக்கையில் பேரில் தொற்று இல்லா மாவட்டமாக கோவை மாறியுள்ளது. இதற்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் ,ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். கோவை பச்சை மண்டலமாக மாறியுள்ள நிலையில் அதற்கு வழிகாட்டிய முதல்வருக்கு கோவை மக்கள் சார்பில் நன்றியைக் தெரிவித்து கொள்வதாகவும்,தற்போது கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டுமே கொரோனவிற்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் இதுவரை 16.5 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு கிடைத்துள்ளது.நிதி கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் வெளியில் வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அனைந்து வர வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர்.கோவையில் கொரோனா தாக்கம் இருந்த 26 கட்டுப்பாட்டு பகுதிகளில் 23 பகுதிகள் விடுவிக்கபட்ட நிலையில் மீதமுள்ள 3 பகுதிகள் இன்னும் 3 நாட்களில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க