September 16, 2020
தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள சிவராஜ் கார்டன் என்ற பகுதியில் வசித்து வருபவர் அபுல் உசேன் (25) . இவர் அசாம் மாநிலம் ரூபாகி மாவட்டம் பகுதியிலிருந்து தன் குடும்பத்துடன் வந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவியும் மூன்று வயதில் பெண் குழந்தையும், சகோலம் என்ற 9 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அதிகாலை எழுந்த கணவன் அபுல் உசேன் வேலைக்காக சென்றுள்ளார்.வீட்டில் இருந்த மனைவி தூங்கி கொண்டிருந்த நேரத்தில் 9மாத குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகில் பாத்திரம் கழுவ தண்ணீர் நிரப்பிய வாளியில் குழந்தை தவறி விழுந்தது. தூக்கத்திலிருந்து எழுந்து தாய் பல இடங்களில் குழந்தையை தேடி உள்ளார்.அப்போது மயங்கிய நிலையில் குழந்தை தலைகுப்புற கிடப்பதைக் கண்டு என் கணவருக்கு தகவல் சொல்லி குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து கொண்டான் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.