• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தண்ணீர் தேடி அலையும் யானை கூட்டங்கள்

April 3, 2019 தண்டோரா குழு

கோவை அருகே வனப்பகுதியில் நிலவும் வறட்சியினால் தண்ணீர் தேடி யானைகள் கூட்டங் கூட்டமாக அலைந்து வருகின்றன.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தண்ணீர் வனவிலங்குகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் யானைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை ஆனைக்கட்டி பகுதியில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி யானைகள் கூட்டங்கூட்டமாக வந்துள்ளன. குட்டி உள்ளிட்ட 9 யானைகள் கூட்டமாக கங்கா சேம்பர் என்ற இடத்திற்கு வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்து சென்றன. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாததே யானைகள் வருவதற்கு காரணமெனவும், போதியளவு தண்ணீரை தொட்டிகளில் நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க