• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தடை செய்யப்பட்ட 140கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

December 31, 2019

கோவையில் தடை செய்யப்பட்ட 140கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் அன்மையில் குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பதற்கு தடை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இதே போல் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு கோவை புளியகுளம் பகுதியில் குட்கா போதை பொருளை வைத்து விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் கொண்ட குழுவினர் புளியகுளம் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த 140கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் குட்கா வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க