• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் – போலீசார் வலைவீச்சு

December 25, 2018 தண்டோரா குழு

சகோதரியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான சகோதரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் கார் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் மகளும், டிப்ளமோ படிக்கும் மகனும் உள்ளனர். இந்நிலையில் டிப்ளமோ படிக்கும் சகோதரன் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது சகோதரிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியலுக்கு ஆட்படுத்தி உள்ளார். இதற்கிடையில், மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதாக தெரிகிறது. இத்தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரியவந்ததையடுத்து மாணவியிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர்.

ஆனால் மாணவி கர்பத்திற்க்கு காரணமானவர்கள் பற்றி கூற மறுத்துவிட்டார். அவர்களது பெற்றோர்களும் புகார் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து மாணவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில் அவரது சகோதரர் தான் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து செல்வபுரம் போலிசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரது சகோதரரை தேடி வருகின்றனர்.

சகோதரனே தன் சொந்த சகோதரியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த சம்பவம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க