• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டீ டைம் மற்றும் கஃபே கிளப் என்ற தேநீரகம் துவக்கம் !

September 16, 2020 தண்டோரா குழு

தேயிலை விவசாயிகள் பயன்படும் வகையில் நேரடியாக தேயிலையை வாங்கி பயன்படுத்த உள்ளதாக கோவையில் துவங்கியுள்ள ”Desi Tea Time and Cafe club நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 700க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ள இந்தியாவின் முன்னணி தேயிலை நிறுவனமான தேசி டீ டைம் பிரைவேட் லிமிடெட் சார்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் டீ டைம் மற்றும் கஃபே கிளப் என்ற தேநீரகம் துவங்கப்பட்டுள்ளது. 20 வகையான டீ வகைகளுடன் கோவையில் முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளது.இதன் துவக்க விழாவில் தமிழக பா.ஜ.க.,மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.

இது டீ டைம் நிறுவனத்தின் நிறுவனர் உதய் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

டீ டைம் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கிராமத்தில் துவங்கப்பட்டு, தற்போது 700க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும்,குறிப்பாக குறைவான விலையில் சுமார் இருபது வகையான தேநீர் வகைகளை வழங்கி வருவதாகவும்,நாங்கள் தனித்துவமான சொந்த உற்பத்தி தேயிலையை பயன்படுத்துகிறோம்.
வரும் காலங்களில் தேயிலை உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்ய உள்ளதாகவும் இதனால் தேயிலை விவசாயிகள் பயனடைய முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டிற்குள் 2000 கடைகள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, டீ டைம் முதன்மை செயல் அதிகாரி கபிலன், கொங்கு மண்டல பங்குதாரர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க