• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை, ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பை முதல் சுற்று போட்டிகள் நிறைவு ;~அனிஷ் ஷெட்டி, புவன் போனு முன்னிலை

August 11, 2025 தண்டோரா குழு

மோட்டார்ஸ்போர்ட் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான, ஜேகே டயர் நடத்தும்ஜேகே டயர் நோவிஸ் கோப்பை – ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்கான முதல் சுற்று போட்டியின் 3 பந்தயங்கள் கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் வகையில் நிறைவடைந்தது.

28வது ஜேகே டயர் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, இந்த இரண்டு பிரிவுகளிலும் பரபரப்பான பந்தயங்கள் நடைபெற்றன, வார இறுதியில் முடிவடைந்த முதல் சுற்றில் அனிஷ் ஷெட்டி மற்றும் புவன் போனு ஆகியோர் தங்கள் திறமைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினார்கள்.ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை மோட்டார் சைக்கிள் போட்டியில் அனிஷ் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த 3 பந்தயங்கள் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தின.ஹூப்ளியில் பிறந்து பெங்களூருவில் வசித்து வரும் அனிஷ்இந்த போட்டியில் வெல்வதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டார். சுமார் 200 கிலோ எடைகொண்ட மோட்டார் சைக்கிளை லாவகமாக ஓட்டி 3 போட்டிகளிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

கடந்த சனிக்கிழமை வானிலையைப் பொறுத்தவரை மிதமான வெயிலாக இருந்த நிலையில் அன்றைய போட்டிகளில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனிஷ் களம் இறங்கினார். அவர் 15 வயதிலிருந்தே பைக் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவருக்கு வயது 30 ஆகிறது.

ஜிடி கோப்பை பந்தயமானது அனுபவமுள்ள ரைடர்களும் புதுமுகங்களும் இணைந்து பங்கேற்கும் ஒரு போட்டியாகும்.இந்த நிலையில் அனிஷுடன் இணைந்தபுதுமுகம் மும்பையைச் சேர்ந்த சிறுவன் கயான் ஜூபின் படேல்.கயான் அனிஷைப் போல வேகமாக இல்லை என்றபோதிலும்,வார இறுதியில் நடந்த மூன்றாவது பந்தயத்தில் முந்தைய சீசனின் நடப்பு சாம்பியனான நவநீத் குமாரை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதல் இடத்திற்கு கயான் முன்னேறினார்.ஒட்டுமொத்தமாக, புள்ளிப்பட்டியலில், அனிஷ் ஷெட்டி 30 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார்.

கயான் 19 புள்ளிகளுடனும், நவநீத் 12 புள்ளிகளுடனும் உள்ளனர்.வெற்றி குறித்து அனிஷ் ஷெட்டி கூறுகையில், எனது கடின உழைப்புக்கு இந்த வார இறுதியில் சிறப்பான பலன் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.3 பந்தயங்களிலும் சிறப்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய அனிஷை பார்த்த புதுமுகங்களுக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது. அவர் தனது பைக்கில் வேகத்தையும் ஸ்டைலையும் வெளிப்படுத்தினார்.

அமெச்சூர் வீரர்களில், பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரையன் நிக்கோலஸ் மூன்று பந்தயங்களிலும் 36 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தார். அவருக்குப் பின்னால் வந்த உம்ராங்சோவைச் சேர்ந்த ஜோஹ்ரிங் வாரிசா 27 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், வதோதராவைச் சேர்ந்த கபீர் சஹோச் 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.ஜேகே டயர் நோவிஸ் கோப்பை கார் பந்தயத்தைப் பொறுத்தவரை புவன் போனு முன்னிலை வகித்தார்.

அமெரிக்காவில் பயிற்சி பெற்று வரும் பெங்களூருவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நடந்த 3 பந்தயங்களிலும் காரை சிறப்பாக ஓட்டி தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், நடந்த 3 பந்தயங்களிலும் ஒன்றைவிட ஒன்று எனக்கு சிறப்பாக இருந்தது. நான் அதை மிகவும் ரசித்தேன் என்று தெரிவித்தார்.

2 நாட்கள் நடைபெற்ற பந்தயங்களில் ஓஜாஸ் சர்வே மற்றும் அபிஜித் வடவள்ளி ஆகியோர் போனு காரை முந்த தொடர்ந்து அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் அது முடியாமல் போனது. 2 நாள் நடைபெற்ற இந்த போட்டிகள் உள்ளூர் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த அனைத்து ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க