June 10, 2020
தண்டோரா குழு
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவையொட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் ஜெ.அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், இன்று காலமானார். இதையடுத்து, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் ஜெ.அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, பகுதி கழக பொறுப்பாளர் சேதுராமன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மெட்டல் மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.