• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்

January 22, 2019 தண்டோரா குழு

கோவையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 60 சதவிகிதம் பேர் கலந்துகொண்டனர்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், ஊரக வளர்ச்சிதுறை, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 80 சதவிதத்திற்கும் மேலான அரசு ஊழியர்களும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களின் போராட்டம் ஒரு புறம் இருந்தாலும் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக அரசு பணிகள் முடக்கப்படதோடு, மாணவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் போராட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க