December 25, 2018
தண்டோரா குழு
கோவையில் ஜவுளி கடை நடத்தி வந்தவரிடம் கொலை மிரட்டல் விடுவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கோவையை அடுத்த ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள். இவர் சுந்தராபுரம் பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில் இந்த தொழிலானது மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜவுளி விற்பனையில் ஏஜெண்டாக பணிபுரியும் சரவணன் என்பவர் பொன்னம்மாளின் வீட்டை விற்று கொடுத்து கடன்களை அடைத்து தருவதாக கூறி ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் ஏமாற்றியுள்ளார்.
இந்த பணத்தை பொன்னம்மாள் கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி சரவணன் கொலை மிரட்டல் விடுவதாக கூறி தமிழ்நாடு விஸ்வ பிரம்மா நிறுவன தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு பாதுகாப்பும் மற்றும் பணத்தை மீட்டு தர கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனு அளித்தனர்.