October 28, 2017
தண்டோரா குழு
ஆட்டோ மீட்டர் கட்டண நிர்ணயம் குறித்து பல கட்ட கோரிக்கை போராட்டத்தை கோவை ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு நடத்தி வருகின்றனர்.இருப்பினும் முறையான கட்டணம் நிர்ணயம் செய்வதில் தமிழக அரசு சரியான முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக,திமுக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை விவாதம் செய்தனர்.
இதனையடுத்து வரும் ஜனவரி முதல் அரசு ஒத்துழைப்பு இல்லை என்றாலும் கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் கிலோமீட்டருக்கு 30 ரூபாய் வீதமும் அடுத்த ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் வீதம் வசூலிக்கபடும் என முடிவெடுத்து கட்டண பட்டியலை வெளியிட்டனர்.
இது குறித்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமை நிர்வாகிகள் கூறுகையில்,/strong>
கோவையில் தனியார் நிறுவனங்கள் மறைமுகமாக ஆட்டோ கட்டணம் உயர்த்தி மக்களுக்கு சிரமத்தை தருகின்றனர்.இந்நிலையில் இன்றைய கால சூழலையை மனதில் கொண்டு அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணய செய்யமால் காலதாமதம் செய்து வருகிறது. இதை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் மக்களை மறைமுகமாக சுரண்டி வருகின்றனர். இதை கண்டிக்கும் வகையில் இன்று நாங்களே ஆட்டோ கட்டணத்தை முடிவு செய்து வெளியிட்டு உள்ளோம். அரசு இதற்கு அனுமதி வழங்காவிடிலும்,ஜனவரி முதல் இந்த கட்டண படி ஆட்டோகள் ஓடும் என தெரிவித்தனர்.