May 16, 2020
தண்டோரா குழு
கொரோனா தாக்குதல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வருவாய் இழந்துள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த சிறப்பு ரயில்களில் பயணிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற தொழிலாளர்கள் பலர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகத்தினரிடமும் விண்ணப்பம் அளித்து வருகின்றனர். விண்ணப்பம் அளித்து பல நாட்கள் காத்திருந்தாலும் பயணச்சீட்டு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பாதிப்பால் வருவாய் இழந்துள்ள நிலையில், வேலை செய்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் உதவி செய்யாததால் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளிலும், நடைபாதைகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தஞ்சமடைந்து வருகின்றனர்.