• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சேர,சோழ,பாண்டிய நாட்டின் உணவு திருவிழா !

February 20, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற நம்ம ஊரு சாப்பாடு உணவு திருவிழாவில் சேர,சோழ,பாண்டிய நாட்டின் பழமையை நினைவு கூறும் வகையில் பல்வேறு உணவு வகைகள் இடம் பெற்றுருந்தன.

கோவை விமான நிலையம் அருகில் உள்ள மேரியோட் குழுமத்தின் ஃபேர் பீல்டு ஓட்டலில் தமிழர் உணவுத் திருவிழா 2.0 நடைபெற்றது. இன்று துவங்கி 7 நாட்கள் நடைபெற உள்ள இதில் பழமையை போற்றும் பல்வேறு வகையான உணவு வகைகள் இடம்பெற்றன. ஓட்டலின் தலைமை சமையல் கலை நிபுணர் சோமு தலைமையில், கோவையில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் தமிழகத்தின் கொங்கு,நெல்லை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பிரபல உணவு வகைகள் இடம் பெற்றன.

அசைவ வகைகளில் ஆம்பூர் பிரியாணி, மட்டன் கோலா,சுறா மீன் புட்டு,,மதுரை நாட்டுக்கறி தோசை,விருது நகர் புரோட்டா செட்டிநாடு சிக்கன் மேலும் சைவ வகையில் தமிழர் உணவான கம்பு,ராகி,வாழைப்பூ வடை, மற்றும் மூலிகை ரசம் என தமிழர் உணவு வகைகள் இடம் பெற்றன. இனிப்பு வகைகளில் அதிரசம்,நிலக்கடலை உருண்டை,தேங்காய் பர்பி மற்றும் மதுரை ஜிகிர்தண்டா,நன்னாரி சர்பத் என தமிழர் உணவு பரிமாறப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டல் பொது மேலாளர் பரத்,

இந்த தமிழர் உணவு திருவிழா எங்களது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் நமது தமிழர் பண்பாட்டு உணவை ரசித்து சுவைப்பதாக கூறினார். இதில் தினசரி 70 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சேர,சோழ,பாண்டிய நாட்டு சுவையுடன் தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க