• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செல்போன் வியாபாரிகள கருப்பு பேட்ச் அணிந்து ஒருநாள் கடையடைப்பு போராட்டம்

June 24, 2020 தண்டோரா குழு

மொபைல் கடை நடத்தி வந்த தந்தை, மகனை கொலை செய்த போலீசாரை கண்டித்து கோவையில் செல்போன் வியபாரிகள் நல சங்கத்தினர் கருப்பு பேட்ச் அணிந்து ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தான் குளத்தின் மொபைல் கடை நடத்திவந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை தாக்கி கொலை செய்த காவல்துறையை கண்டித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரி செல்போன் வியாபாரிகள் நல சங்கமான MMWA மற்றும் TAMRRA தேசிய சங்கமான AIMRA சார்பில் கோவை சிங்கநல்லூர் ,காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடைகளை ஒருநாள் அடையாள கடையடைப்பு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மொபைல் கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் செல்போன் வியாபாரிகள் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் கொடுக்கவும்,மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரித்து நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.இதில் செல்போன் வியபாரிகளான ஆஷிக், அப்துல்லா, நிர்மல், அண்ணாமலை, ராஜா உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க