• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செல்போனை பறித்து சென்ற நபரை துரத்தி பிடித்து கைது செய்த காவல் துறை

March 12, 2018 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து சென்ற நிலையில் அவரை காவல் துறையினர் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிரண் என்பவர் நடந்து சென்ற போது, வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென அவர் வைத்து இருந்த செல்போனை பறித்து சென்று ஓடினார். அப்போது அவரை பின் தொடர்ந்து கிரணும் ஓடினார். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை துரத்தி சென்று பிடித்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் கைது செய்யப்பட நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பதும், ஏற்கனவே கிரணுடன் ஒன்றாக வேலை செய்து வந்து உள்ளார். அப்போது  நேற்றே அவர்  கிரணிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் திருடி சென்ற வழக்கில் காவல் துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் வினோத் , அவரை பின் தொடர்ந்து வந்து அவர் வைத்து இருந்த செல்போனையும் பறித்து செல்வதற்காக வந்து உள்ளார். அப்போது அவரை காவல் துறையினர் மடக்கி பிடித்து உள்ளனர்.

மேலும் படிக்க