• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

April 21, 2020 தண்டோரா குழு

கோவையில் களத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் ஆங்காங்கே நடக்கும் பல்வேறு நடைமுறைகளை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி துறையினர் செய்தி சேகரித்து வெளியிட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து களத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக் நேற்றைய தினம் சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதேபோல் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு தனித்தனியாக ரேபிட் டெஸ்ட் மூலம் பரிசோதனை நடைபெற்று வருகிறது.இதன் முடிவுகள் இன்று மாலைக்குள் குறுஞ்செய்தியாக வெளியிடப்படும்.

மேலும் படிக்க