• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செங்கல் சூலை ஊழியர்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 19, 2018

கோவையில் செங்கல் சூலையில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று(பிப் 19)மனு அளித்தனர்.

கோவை கணுவாய்,தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூலைகள் செயல்பட்டு வருகின்றன.அங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கு செங்கல் சூலை நிர்வாகம் சார்பில் மொத்த குடியிருப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

இந்த சூழலில்  தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அறையிலான குடியிருப்புகள் பாதுகாப்பு இல்லாமலும் எவ்வித வசதியும்  இல்லாமலும் இருப்பதால் தங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க