May 28, 2020
தண்டோரா குழு
சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற ஒற்றை காட்டு யானையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அடுத்த சாடிவயல் வனப்பகுதியில் சிறுவாணி அணைக்குச் செல்லும் சாலையில் சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும், வழக்கமாக ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தை கடந்து செல்லும்.
இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அங்கு வந்த ஒற்றை காட்டு யானை சுத்திகரிப்பு நிலையத்தில் இரும்பு கேட்டுகளை உடைத்து உள்ளே சென்றது. வெளியே ஊழியர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் அதே வளாகத்தில் நின்ற யானை பின் வனத்திற்குள் சென்றது.