• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி – நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்

January 28, 2019 தண்டோரா குழு

கோவையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி முதலீட்டாளர்கள் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை காந்திபுரம் 6வது வீதி பகுதியில் சக்திவேல், சுதா தம்பதியினர் கோகுல கண்ணன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதிக வட்டி தருவதாக கூறி தின வசூல் அடிப்படையில் 100க்கும் மேற்பட்டோரிடம் இந்நிறுவனம் தலா 2 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2017 ம் ஆண்டே பண்ட் முடிந்துவிட்ட நிலையில் முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்ப கேட்ட போது நிதி நிறுவன உரிமையாளர்கள் காலம்தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. மேலும் பணம் கட்டியவர்கள் திரும்ப கேட்டால் அடியாட்களை கொண்டும் காவல்துறை உதவியோடும் அவர்களை மிரட்டியதாகவும் தொடர்ந்து புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று பணம் தருவதாக அழைத்ததை அடுத்து அலுவலகத்திற்கு வந்த முதலீட்டாளர்களிடம் தற்போது பணம் தர முடியாது எனவும் வழக்கு நிலவையில் இருப்பதால் சில காலம் ஆகலாம் எனவும் நிதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவிய நிலையில் பாதுகாப்பிற்காக வந்திருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் படிக்க