• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சி.எஸ்.ஐ மண்டல கூட்டத்தில் மோதல் எதிரொலி ஆலய போதகர் பணியிடை நீக்கம்

July 26, 2021 தண்டோரா குழு

கோவை ரேஸ் கோர்ஸ்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் சி.எஸ்.ஐ திருமண்டல நிர்வாக குழு கூட்டம் கடந்த 19-ந்தேதிநடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

அதில் நிர்வாக குழு உறுப்பினரான தர்மபுரியை சேர்ந்த வழக்கறிஞர் நேசமெர்லின் ( 36) என்பவர் இரும்புதடியால் தாக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போதகர்கள், சார்லஸ் சாம்ராஜ், வில்சன் குமார் மற்றும், சுதன் அப்பாதுரை உட்பட 15 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல சி.எஸ்.ஐ. ஆலய செயலாளர் ஜேக்கப் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் நேசமெர்லின், அமிர்தம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் செயின்ட் பால் ஆலய போதகர் வில்சன் குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த மோதல் தொடர்பாக கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஆல் சோல்ஸ் ஆலய போதகர் சார்லஸ் சாம்ராஜ் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் திமோத்தி ரவீந்தர் எடுத்துள்ளார்.

மேலும் படிக்க