August 21, 2020
தண்டோரா குழு
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதி அளிக்காத நிலையில் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது பரவி வரும் கொரொனா தொற்றின் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக செல்வதற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனினும், இந்து அமைப்புகள் பலரும் கட்டாயமாக சிலைகளை வைத்து வழி படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.ஆனால் தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை என்று தெரிவித்ததால் இந்த வருடம் சிலைகள் வைக்காமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்று மக்கள் பலரும் நினைத்திருந்த நிலையில் கோவையில் குறிச்சி குனியமுத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இதனால் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று கோவை மக்கள் எண்ணுகின்றனர்.