• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறை கைதிகள் இயக்கும் பெட்ரோல் பங்க் துவக்கம் !

February 22, 2019 தண்டோரா குழு

சிறை கைதிகள் இயக்கும் பெட்ரோல் பங்குகளை வேலூர், புதுக்கோட்டை, கோவை ஆகிய 3 இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக மத்திய சிறைகளில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தினை அமைத்திட முதல் கட்டமாக கோவை, வேலூர் பாளையங்கோட்டை, மத்திய சிறை-1 புழல் மற்றும் புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆகிய இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்குகளை இன்று முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை நஞ்சப்பா ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைக்க சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் 22 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. பீரிடம் பில்லிங் ஸ்டேசன் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. முதல் விற்பனையை கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.அறிவுடை நம்பி, ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் சுரேஷ், துணை பொது மேலாளர் மானஷ்ரவுத்ராய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

24 மணி நேரமும் செயல்படும் இந்த பெட்ரோல் பங்கில் 35 சிறை கைதிகள் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும், இந்தியன் ஆயில் நிறுவனம் சிறை கைதிகளுக்கு ஊதியம் வழங்கும் எனவும் அறிவுடைநம்பி தெரிவித்தார்.

இங்கு 3 ஷிப்ட்டுகளில் கைதிகள் பணியாற்றுவார்கள். இவர்களுக்கு பெட்ரோல் பங்க் ஊழிர்களுக்கான சீருடைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சிறை துறைக்கு மாதம் ரூ. 43 ஆயிரம் அளிக்கும். மேலும் சிறை கைதிகளுக்கு சம்பளமும் வழங்கும். இந்த பெட்ரோல் பங்கில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட போர்வை, துண்டு, காக்கி துணி மற்றும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏ.டி.எம். வசதியும் உள்ளது. இங்கு 6 பம்பிங் மிஷின்கள் உள்ளது. அடுத்தகட்டமாக பாரதியார் ரோட்டில் சிறைக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தநிகழ்ச்சியில் சிறைவாசிகள், சிறை பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க