• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறு குறு, நிறுவனங்களின் தொழிற்கடன் பற்றிய கலந்தாய்வு கூட்டம்

June 19, 2020 தண்டோரா குழு

கோவையில் சிறு குறு, நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி, மற்றும் தொழிற்கடன் பற்றிய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால் சிறு குறு,தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி,மாநகராட்சி ஆணையாளர் ஷர்வணகுமார் ஜடாவத், மற்றும் அரசு அதிகாரிகள், துறை பிரிவு அலுவலர்கள், மற்றும் வங்கிமேலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் வாயிலாக, சிறு குறு அமைப்பினரின் பல கேள்விகளுக்கு தீர்வுகள் பெறும் வகையில் அனைத்து அதிகாரிகளும் கலந்தாலோசனை நடத்தினர். இதில் சிறு குறு நிறுவனங்கள் மீண்டும் இயக்க, தொழிலாளர்கள் பற்றாக்குறை, மற்றும் மின்சாரதுறையின் மின் கட்டனம் மற்றும் வங்கி கடன் வழங்குவது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை, அதிகாரிகளின் முன்னிலையில் சிறு, குறு அமைப்பினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க