• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் வன்புணர்வு செய்த வளர்ப்பு தந்தை கைது

June 22, 2021 தண்டோரா குழு

கோவையில் சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் குடியேறி கட்டட வேலை செய்து வருகிறார். கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் தென்காசி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பிரகாசுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதத்தில் பிரகாசும் அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஒரே வீட்டில் வசிக்க துவங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்தப் பெண்ணின் மூத்த மகளிடம் கட்டாயபடுத்தி பாலியல் உறவு கொண்டுள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணின் சப்தம் கேட்டு அவளது தங்கை வீட்டிற்கு உள்ளே வந்து பார்த்த பொழுது அக்காவை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் அந்த சிறுமி இடம் இதை வெளியில் சொன்னால் உனது அம்மா, அக்கா மற்றும் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி இருக்கிறார். இதனால் அந்த சிறுமி பயந்து போய் யாரிடமும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் பிரகாஷால் பாலியல் உறவுக்கு ஆட்பட்ட அந்தப் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் உறவு நடந்திருப்பதை உறுதி செய்தனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க