• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் கைது

June 24, 2020 தண்டோரா குழு

கோவை போத்தனூர் அருகே *எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா* என்று சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த வயதான நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவன் முகமது பீர் பாஷா வயது 66 ஆகும்.இதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளான். உடனே அந்த சிறுமியிடம் *எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா* என்று கேட்டு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளான். இதனை அச்சிறுமி அவரின் தாயாரிடம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட நபரின் குடும்பத்தாரிடம் அச்சிறுமியின் வீட்டார் தெரிவித்தபோது அந்த முதியவரை கண்டித்துள்ளனர்.ஆனால் அதனை பொருட்படுத்தாத வயதானவன் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளான். இதனைத்தொடர்ந்து பயந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் படிக்க