• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிரியா படுகொலையை கண்டித்து இஸ்லாமியர் அமைப்புகளின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

March 2, 2018 தண்டோரா குழு

கோவையில் சிரியா படுகொலையை கண்டித்து, அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகளின் கூட்டமைப்பினர் இன்று(மார்ச் 2) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர், இதனை கண்டித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின்  கூட்டமைப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக ஐநா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கு சித்திரவதையை அனுபவித்து வரும் மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் சிரியா தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தி பெண்கள், குழந்தைகள், என அனைவரும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க