June 22, 2020
தண்டோரா குழு
கோவை ஆனைகட்டி அருகே ஜம்புகண்ணி எனும் வனப்பகுதியில் ஒற்றை காட்டுயானை சில தினங்களுக்கு முன் தன் வாயில் காயத்துடன் வெளியவந்தது. பின்னர் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு சுகுமார் எனும் வனத்துறை மருத்துவர் தலைமையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுவந்தது. குறிப்பாக வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஆண்டிபயாட்டிக் நேற்று மட்டும் 32 குழுகோஸ் பாடில்கள் மருந்தாக யானைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் யானை சிகிச்சை அலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தது.
இது தொடர்பாக பேசிய அதிகாரிகள்,
யானைக்கு 12 வயதான நிலையில் அதன் வாயிற்பகுதியில் ஏற்பட்ட 3 வது பல் முளைக்கும் இடத்தில் குச்சி ஒன்று குத்தியிருந்ததால் உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் தவித்து வந்ததாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன் வாயில் குச்சி குத்தி இருக்கலாம் என்றும் யானையால் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் உடல் சோர்வடைந்து இறந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். இன்று யானை உடல் பிரேத பரிசோதனை மேற்கொண்டு உடல் அடக்கம் செய்யப்படவிருக்கின்றன.யானை தொடர்ந்து இரண்டு நாட்களாக சிகிச்சையிலிருந்த நிலையில் கால் நடை மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் யானை இறந்தது உயிரியல் ஆர்வலர்ககிடையே தற்போது சோகம் ஏற்பட்டுள்ளன.