August 20, 2020
தண்டோரா குழு
கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சலீவன் வீதி பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த இந்து அமைப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய விவேகானந்தர் பேரவை நிறுவன தலைவர் ஜெலேந்திரன்,
இந்து மக்கள் விழாவான விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கூடாது என்று பலரும் முயற்சித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் தான் இது போன்று செய்திருக்க கூடும், இது போன்று செயல்கள் செய்பவர்களை கைது செய்து வழக்கு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டா உள்ள நிலையில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதுமட்டுமின்றி அப்பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இயந்திரங்கள் மோதி சிலை சேதமடைந்திருக்கலாம்
என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.