May 6, 2020
தண்டோரா குழு
சமூக விலகலை முறையாக கடைபிடிக்கும் விதமாக ரோட்டரி கிளப் சார்பில் கோவை போலீசாருக்கு குடை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில் சமூக விலகலை கடைபிடிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள்,தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஊடகத் துறையினர் சமூக விதிகளை கடைபிடித்து மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர்.இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக குடைகளை உபயோத்து பல்வேறு தரப்பினரும் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். குடைகள் மூலமாக ஒருவரின் முன்பும், பின்னும் போதுமான இடைவெளி ஏற்படுத்தப்படும் என்பதால் இந்த முறையை பலரும் கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இன்டஸ்ட்ரியல் சிட்டி, காட்டன் சிட்டி, எலைட் ஆஃப் ஆர்.ஐ 3201 ஆகிய அமைப்புகள் சார்பில் சாய்பாபா காலனி போலீசாருக்கு குடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பை சேர்ந்த பிரபு சங்கர், சரவணன், உமாசங்கர், ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் .