• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சமூக சேவையில் கலக்கும் ரோட்டரி ஈ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் !

January 1, 2023 தண்டோரா குழு

சமூகப்பணி என்பது தனி நபராலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாலோ சமூக நலன் கருதியும் மேம்பாடு கருதியும் செய்யப்படும் சேவையாகும்.ரோட்டரி கிளப் என்பது ஒரு சமுக சேவை செய்யும் சேவை அமைப்பு. இதில் இருக்கும் செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முயன்ற செல்வதை கொண்டு ஏழை எளியோருக்கு உதவி புரிபவர்கள்.பெரும்பாலும் செயல்படும் ரோட்டரி கிளப்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்களாக இருந்து செயல்படுவார்கள்.

ஆனால்,நாம் இன்று பார்க்கவிருப்பது ரோட்டரி ஈ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ்.இந்த கிளப் 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது.பொதுவாக இந்த கிளப்பில் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக தங்களது சமூக சேவைகளை செய்து வருகிறார்கள்.உலகம் முழுவதும் இருந்து கோவை,சென்னை,பெங்களூரு,நெதர்லாந்து, லண்டன்,அமெரிக்கா,கனடா என தற்போது 39 நபர்கள் இந்த கிளப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த கிளப்பில் 22 வயது 45 வயது வரை உள்ளவர்களே உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்கள் இதுவரை 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

கோவையில் செயல்படும் இதயங்கள் அறக்கட்டளை மூலம் அதன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கிருஷ்ணன் சாமிநாதன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.அவருக்கு பல்வேறு ரோட்டரி கிளப்கள் உதவி புரிந்து வருகிறார்கள்.அதன் ஒருபகுதியாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரோட்டரி ஈ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் சார்பில் ‘சில் பிக்ஸ்’ திட்டத்தின் மூலம் 40 மினி குளிர்சாதன பெட்டிகள் வழங்கியுள்ளது.

மேலும், சி.எஸ்.ஆர் திட்டம் மூலம் ரோட்டரி ஈ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ், இதயங்கள் அறக்கட்டளை, ராசி சீட்ஸ் ஆகியவை இணைந்து ரூ.35 லட்சம் மதிப்பில் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளை கண்டறிய உதவும் “ஸ்வஸ்தி வாகன்” திட்டம் துவங்கப்பட்டது. இதன் வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்தார்.

கிராமப்புறங்களில் சர்க்கரை நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு குறைவு, டைப்2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வை இழப்பு, மாரடைப்பு, கால் அகற்றுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க பரிசோதனை அவசியம்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குழந்தைகள் பெரியவர்களை பரிசோதனை செய்ய இந்த
“ஸ்வஸ்தி வாகன்” பெரும் உதவியாக இருக்கும்.

அபாயா திட்டம்

ரோட்டரி ஈ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் சார்பில் உருவான முக்கிய திட்டம் அபாயா. பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 4 முறை இன்சுலின் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.அதுமட்டுமின்றி இன்சுலின் கொடுப்பதற்கு முன்பு அவர்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு க்ளுகோ மீட்டர் மூலம் நீடல் பிரிக்ஸ் செய்ய வேண்டும்.தினமும் 7 முறையாவது இப்படி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பெற்றோர்களுக்கும் மனவேதனை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் எங்கள் கிளப் மூலம் 14 கார்டியன் டிரான்ஸ்மிட்டர் வழங்கி உள்ளோம்.இத்திட்டத்திற்காக பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் சார்பில் சி.எஸ்.ஆர் திட்டம் மூலம் 5 லட்சம் ரூபாய் எங்கள் கிளப்பிற்கு வழங்கினார்கள்.

இந்த கார்டியன் டிரான்ஸ்மிட்டர் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளின் கையில் பொறுத்தி அதனை டிவைய்ஸ் மூலம் கண்காணிக்கலாம். 5 மொபைல் போன்களுடன் பொறுத்தி கொள்ளலாம். சில நேரங்களில் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் சர்க்கரை அளவு கூடிவிடும். அந்த சூழலில் இந்த டிவைய்ஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதன் மூலம் பயன்பெற்று உள்ளனர். அவர்களின் பெற்றோர்களும் இதனால் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரொட்டேரியன் ரேஷ்மா ரமேஷ் கூறுகையில்,

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி ஈ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் கிளப்பின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம். அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ குறைகள் இருந்தால் அது அவர்களின் குடும்பத்தையே பாதிக்கும். இன்னும் பல குழந்தைகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சரியான சிகிச்சை கிடைக்காமல் சிரமப்பட்டுகொண்டு இருக்கின்றனர். எங்கள் கிளப்பின் மூலம் பல குழந்தைகள் பயன் அடைந்து உள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் எங்கள் கிளப் மூலம் நேரடியாக 55 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் இன்னும் நிறைய குடும்பங்களுக்கு உதவி செய்ய நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்.எங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ராசி சீட்ஸ் அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கவிதா ராஜேந்திரன்.மேலும், பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ்நிறுவனத்தின் தலைவர் ரொட்டேரியன் எஸ்.வி ஆறுமுகம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

மேலும் படிக்க