• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி

December 6, 2019

கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது வீட்டில் சந்தன மரம் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை இவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் , அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சந்தன மரத்தை வெட்டியுள்ளனர். மரம் வெட்டும் சத்தம் கேட்டு விழித்த அசோக்குமார் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் தினேஷ் ஆகியோர் சத்தம் போட்டுள்ளனர் .

இதனையடுத்து திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் கத்தியை காட்டி , அசோக் மற்றும் தினேஷை சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். அப்போது இருவரும் பலமாக சத்தம் போட்டதால் மர்ம கும்பல் மரத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அசோக்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து காவல் துறையினர் , அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் 5 பேர் தங்களது முகத்தை துணியால் மூடியுள்ளனர். விட்டருகே உள்ள சாலையில் வாகனம் வரும்போது மண் குவியலுக்கு பின் மறைந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க