October 10, 2020
தண்டோரா குழு
கோவையில் இந்து மக்கள் இயக்கத்தின் சக்திசேனா சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக இந்து மக்கள் இயக்கத்தின் சக்திசேனா சார்பாக கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் புல்லட் சேகர் முன்னிலையில் நடைபெற்ற இதில் அயோத்தியில் புதிதாக அமைய உள்ள புதிய ராமர் கோவிலை தகர்த்தெறிவேன் என பகிரங்கமாக பேசிய நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசங்கள் எழுப்பினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சக்திசேனாவின் நிறுவன தலைவர் அன்புமாரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,வரும் பதினாறாம் தேதி சிறைச்சாலை முன்பாக பாட்சாவை விடுதலை செய்ய கோரி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் சக்திசேனா மக்கள் இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.