July 10, 2020
தண்டோரா குழு
கோவையில் கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் 200 ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸால் பல்வேறு குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு சமூக அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை கோட்டக் ஆயுள் காப்பீட்டு (APC) நிறுவனம் சார்பாக 200 ஏழை எளிய மக்களுக்கு தலா ரூபாய் 600 மதிப்பிலான அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வடவள்ளி காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில்,கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கோவை கிளை தலைவர் மதன் குமார், துணை தலைவர்கள் சஞ்சய், பிரதீப் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.