• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற நகைக்கடைக்கு சொந்தமான சைலோ கார் கண்டெடுப்பு

January 8, 2019 தண்டோரா குழு

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தங்க நகைகள் கொண்டு வரப்பட்ட காரை பறித்து சென்ற கொள்ளையர்கள் மதுக்கரை தென்றல் நகர் அருகே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்ட நிலையில் தனிப்படை போலீசார் இன்று காலை காரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லரியிலிருந்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கல்யாண் ஜூவல்லரிக்கு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பணியாளர்கள் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல திருச்சூரில் இருந்து கோவை காந்திபுரம் கல்யாண் ஜூவல்லரி நோக்கி கிட்டத்தட்ட 380 சவரன் தங்க நகையும்,243.320 கிராம் வெள்ளி பொருட்களையும் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது காக்காசாவடியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டல் அருகே வரும்பொழுது திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரின் பின்பகுதியில் இரண்டு கார்கள் மோதியது.பின்னர் இந்த ஸ்கார்பியோ கார் மற்றும் ஆல்டோ காரில் இருந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் கார் கண்ணாடியை உடைத்தனர்.

அதேபோல காருக்குள் இருந்த திருச்சூரைச் சேர்ந்த அர்ஜீன் 22, மற்றும் வில்ப்ரட்டை 33, தாக்கி காருக்குள் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை பறித்து காருடன் கோவை வழியாக தப்பி சென்றனர். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்து வந்த காக்காசாவடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் தங்க நகை கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க ஏற்கனவே நேற்று நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தன. இன்று கூடுதல் எஸ்.பி முத்தரசு தலைமையில் மேலும் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சூரில் இருந்து தங்க நகைகள் கொண்டு வரபட்ட காரை பறித்து சென்ற கொள்ளையர்கள் மதுக்கரை தென்றல் நகர் அருகே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். நகைகடைக்கு சொந்தமான அந்த சைலோ காரை தனிப்படை போலீசார் இன்று காலையில் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைகளுடன் தப்பியோடிய கொள்ளையர்கள் நீலகிரி,திருப்பூர்,ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. அதனால் அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க