• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை மநீம கோவை பாராளுமன்ற வேட்பாளர் நேரில் சந்தித்து ஆறுதல்

March 28, 2019 தண்டோரா குழு

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை மக்கள் நீதி மையம் கோவை பாராளுமன்ற வேட்பாளர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் 2 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது பெண் குழந்தையின் பெற்றோரை மக்கள் நீதி மையம் துணை தலைவர் மற்றும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர். மகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குழந்தையின் பெற்றோரிடம் பேசும் பொழுது இந்தப் பகுதியில் கழிப்பிடம் போவதற்கும் கூட வசதி இல்லை. இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்தப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா வசதி செய்யப்பட வேண்டும்.காவலர்கள் இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வர வேண்டும் என்றும் தெரிவித்ததாகவும் குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து கடுமையான தண்டனைகளை உடனடியாக தர வேண்டும் மக்கள் நீதி மையம் சார்பில் அவர்களுக்கு வழக்கு நடத்துவதற்காக அனைத்து உதவிகள் செய்யப்படும் என்றும், கட்சித் தலைவர் கமலஹாசன் கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையின் போது குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் கூறினார்.

மேலும் படிக்க