September 8, 2020
தண்டோரா குழு
கோவையில் உறுகாய்க்காக இளைஞர் நண்பனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனங்களில் பனியாற்று நான்கு இளைஞர்கள் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் உணவு சாப்பிட வீட்டு சென்றவுடன் இருவர் முதலில் உணவு உட்கொண்டுவிட்டு சென்றுள்ளனர். பின்னர் சித்து குமார் என்ற 17 வயது இளைஞரும், பிரஜங்கி குமார் என்ற 20 வயது இளைஞரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது குழம்பு தீர்ந்ததால் சித்து ஊறுகாய் கேட்டுள்ளார். ஆனால் ஊறுகாய் தர மறுத்த பிரஜங்கி குமார் ஊறுகாயை ஒளித்து வைத்துள்ளார். பின்னர் இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சண்டை உச்சகட்டத்தை எட்ட சண்டை கை கலப்பில் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரஜங்கி குமார் சித்து குமாரை கழுத்தை நெறித்தும் எட்டி உதைத்தும் உள்ளார். அடித்துவிட்டு பிரஜங்கி குமார் வெளியேறிய நிலையில் மயக்கமடைந்த சித்துகுமார் உயிரிழந்துவிட்டார். மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக பீளமேடு போலிஸார் பிரஜங்கி குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஊறுகாய்க்காக தன் அறை சக நண்பரை கொன்ற வட மாநில இளைஞரால் அப்பகுதியில்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.