• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா போராளிகளுடன் ஈகைத் திருநாள் கொண்டாட்டம் !

May 26, 2020 தண்டோரா குழு

கொரோனா நோயினை எதிர்த்து தங்கள் பாதுகாப்பையும் துச்சமாய் நினைத்து போராடிவரும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கை துறையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பில் பிரியாணி உணவு வழங்கி நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ESI மருத்துவமனையின் டீன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து இந்த கொடிய நோயினை எதிர்த்து உயிர்காக்கும் உன்னதப்பணியை செய்து வருவதற்காக அவர்களுக்கு நன்றிகளையும், தொடர் ஆதரவும்
தெரிவிக்கப்பட்டது. அதனுடன் ESI மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வினை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார். மாநகரச் செயலளார் M.S. சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப் அப்துல் ஹக்கீம், அழைப்பியல் துறை செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் பங்குகொண்டனர்.

இந்நிகழ்வினை கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சமூக சேவைப் பிரிவின் சார்பாக அதன் செயலாளர் முஹம்மது ஹக்கிம் மற்றும் சமீர் ஆகியோர் ஒருங்கினைத்தனர்.

மேலும் படிக்க