June 22, 2020
தண்டோரா குழு
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கோவையிலும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கோவையில் இயங்கி வந்த உள்ளூர் பேருந்துகளும், பொள்ளாட்சி போன்ற பகுதிகளுக்கு இயக்கிவந்த பேருந்துகளும் 20, முதல் 25 பேருந்துகள் வரை குறைக்கப்பட்டுள்ளதால் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் அதிகமான அளவில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக பொள்ளாச்சி செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், பயணிகளை வரிசையில் நிறுத்தி பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது,
பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் குறைக்கப்பட்டதால் நாங்கள் இரண்டு மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை குறைக்க அரசு பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.