• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

January 16, 2021 தண்டோரா குழு

கோவையில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். முதற்கட்டமாக இன்று 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் இன்று முன் களப்பணியாளகளுக்கு செலுத்தப்படுகிறது. கோவையில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை சிறப்பாக வழி நடத்துகிறார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட போது தமிழகத்தின் எளிய முதலமைச்சர் தன்னை பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்கொண்டு நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். கோவையில் 53 ஆயிரத்து 495 தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 52 ஆயிரத்து 188 பேர் குணமடைந்துள்ளனர். வலுவான சுகாதார கட்டமைப்பு, போர்க்கால நடவடிக்கை மூலம் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.
கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடும் பணியை இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

அதன்படி கோவையுல் இன்று முகாம் துவங்கியுள்ளது.கோவையில் 40,600 தடுப்பூசிகள் வந்துள்ளது. இதற்காக 105 குளிர்சாத பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் கோவை அரசு மருத்துவமனை பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் இந்த ஊசியை போட்டுக்கொள்ளலாம் மொத்தம் 57,004 பேர் கோவின் ஆப் மூலம் பதிவு செய்துள்ளனர். மையத்திற்கு 100 பேர் வீதம் நாளொன்றுக்கு 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள்,செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.முதல் டோஸ் போட்ட 28 நாட்களுக்கு பின் 2 வது டோஸ் போடப்படும்.14 நாட்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். 18 வயதை எட்டியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள கூடாது.முதல் முறை என்ன நிறுவன மருந்து எடுக்கப்பட்டதோ அதே மருந்து தான் இரண்டாவது முறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தொற்றில் இருந்து மீண்டவர்கள் 4 முதல் 8 வார இடைவெளியில் தடுப்பூசி போட வேண்டும்.கோவையில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒத்திகை போதிய அளவு நடத்தப்பட்டுள்ளது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க