• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை துவக்கி வைத்த ஆணையாளர்

July 19, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷரவன் குமார் ஜவடேகர் IAS கொடியசைத்து துவைக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரானா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக வீதிகள், சாலைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்துவதற்க்காக 10 டிராக்டர், 2 வஜ்ரா வாகனங்கள், ஆட்டோக்களை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏர்படுத்தும் பணிக்கு 40 ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டது. இதன் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து துவைக்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த பணிக்காக 150 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த விழாவில் பேசிய மாநகராட்சி ஆணையாளர்,

உங்களின் பணி மேன்மை மிக்கது, தெற்க்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தொற்று அதிகமாக உள்ளதாக நான் அறிய வருகிறேன். தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பணிகளை இன்று ஒருநாளுடன் முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு தொற்று இல்லா மண்டலமாக கோவை தெற்கு மண்டலத்தை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காவல்துறையினர் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து. கண்டேன்மண்ட் பகுதிகளில் யாரும் வெளிவராத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க