• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா என்றதும் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற நோயாளி – அரை மணி நேரத்தில் சிக்கினார்

July 8, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட முதியவர் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கிடையில், திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த முதியவர் கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவர் தனது மகனை அழைத்துப் பேசியிருக்கிறார். பக்கத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும், வந்து அழைத்துச் செல்லும்படியும் தெரிவித்துள்ளார். அப்போது அவரது மகன் தனது தந்தையால் மற்றவர்களுக்கும் தொற்று பரவிவிடும் என்றுணர்ந்து ‘ஆத்மா’ அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், முதியவரைத் தீவிரமாகத் தேடி அலைந்து பின் சிங்காநல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தின் இருக்கையில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டனர்.

பின்னர், சிங்காநல்லூர் போலீசார் துணையுடன் வந்த அறக்கட்டளையினர் அவருடைய அடையாள புகைப்படத்தை கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து அவரை மீட்க 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். இதனைதொடர்ந்து முதியவரிடம் பேசி சமாதானம் செய்த சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, அவர் அமர்ந்திருந்த பேருந்து நிறுத்த இருக்கைகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட முதியவர் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க