June 27, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா உறுதியான பகுதியில் சட்ட விரோத டாஸ்மாக் விற்பனை நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கூட்செட் ரோடு அருகே உள்ள தனியார் பல்பொருள் அங்காடி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் தனியார் பல்பொருள் அங்காடி உட்பட 30 கடைகள் மூடப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் அங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன் கதவு அடைக்கப்பட்டு, பின் புறத்தில் விற்பனை நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா தொற்று பேராபத்தை உணராமல் டாஸ்மாக்கில் நடக்கும் சட்ட விரோத விற்பனை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.