June 15, 2020
தண்டோரா குழு
கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் ராமர் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர். சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார்சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவை வந்துள்ளார்.
சின்னியம்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.நேற்று அரசு மருத்துவமனையில் கொரொனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழந்தார். இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை இல்லாத காரணத்தால் உயிரிழந்த இளைஞரின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.